Sunday 12 March 2017

இயற்கையை காப்போம்

எந்திரங்கள்
பிளக்கின்றன
இயற்கைதாயின்
இதயத்தை
அமுதம் சுரக்கும்
அவள் மார்பை
துளைத்து
மீத்தேன் வாயுவும்
கச்சா எண்ணையும்
வேளாண் நிலங்களின்
கருவினை அறுத்து
சுரண்டும் வர்த்தகம்
வங்கியை நிரப்பலாம்
வயிற்றை நிரப்பாது
அதீத பணமும்
எந்திர மனமும்
இடுகாட்டிற்க்கே
பாதை காட்டும்
பயிர் செய்பவன்
சமாதியில் மிஞ்சும்
கடைசி கல்
உன் சமாதிக்கான
முதல் கல்


2 comments:

  1. அமுதம் சுரக்கும்
    அவள் மார்பை
    துளைத்து
    மீத்தேன் வாயுவும்
    கச்சா எண்ணையும்..... வரிகள் அருமை.. புகைப்படம் மிக அருமை... நல்ல தேர்வு...

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...