Thursday 19 January 2017

பெங்களூர் தமிழர்குரல்


ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் தமிழினம் நடத்தும் போராட்டங்களைத் தொடர்ந்து இன்று பெங்களூர் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்காக ஒன்று கூடினர். தெளிவான முன்னறிவிப்பின்றியே இன்று பலர் கூடியிருந்தனர். சரியான திட்டமிடல் இருந்துருப்பின் இதுவே இன்னும் பெருமளவில் இருந்திருக்கும். கடைசி நிமிடம் வரை இன்று கூட்டம் இருக்கிறதா என்ற கேள்விகள் இருந்துகொண்டே இருந்தன. இருப்பினும் ஒரு பெரும் கூட்டம் கூடியது.

இக்கூட்டமும், கூச்சலுமே தமிழர் உணர்வை பிரதிபலித்தது. கடந்து செல்வோரை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைத்தது. சாலை போக்குவரத்து  நெரிசலையும் சத்தத்தையும் விஞ்சி விண்ணைக் கிழித்த முழக்கங்கள் தமிழுணர்வை ஊட்டின. அங்கிருந்த ஒவ்வொருவர் குரலிலும் போர்த்தன்மை இருந்தது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்றது ஆரோக்கியமான விசயம். பெண்களும் பெருமளவில் வந்திருந்தனர். பெங்களூர் தமிழர்கள் சனிக்கிழமைகளில் பிரிகேட் ரோட் பப்களுக்கும், ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமின்றி தமிழ் பாரம்பரியம் காக்கவும் கூடுவர் என்பதையே இக்கூட்டம் அறிவித்தது. அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கூட்டங்களின் முன்னோடியாகவே இது பார்க்கப்படுகிறது. உலகத்தமிழர்கள் ஒன்றாக குரல் கொடுப்போம், தமிழர் உணர்விற்க்கு எல்லோரும் உயிர் கொடுப்போம்.










#ஜல்லிக்கட்டு #ஏறுதழுவல் #தமிழர் #தமிழர்உணர்வு #போராட்டம் #பீட்டாஎதிர்ப்பு #பெங்களூர்

#supportjallikattu #bangalore #tamils #banpeta #bengaluru #savejallikattu #bangaloretamils

4 comments:

  1. Super... we support jallikkattu..

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்த தமிழரின் குரல்...

      Delete
  2. Neraya per cancel agitunu info vantha nala vara mudila. ilana maas katirkalam

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. கடைசி நேரம் வரைக்கும் நடக்குமா என்ற கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. இருந்தும் ஒரு சிலர் னு ஆரமிச்சு கொஞ்ச நேரத்துல ஒரு கூட்டமே சேந்துருச்சு. சரியான தகவல் பரிமாற்றம் இருந்துருந்தா இன்னும் பெரிய அளவுல நடந்துருக்கும்.

      Delete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...