Tuesday 22 November 2016

ஜனநாயகம்

வங்கி
வாசலில்
ஒட்டுமொத்த
இந்தியாவும்

ஜனநாயக
ஆணையால்
ஜனமெல்லாம்
கை ஏந்தி

பெரும்புள்ளி
அனைவருமே
முன்பே அறிந்த
தீர்மானம்

ஒப்புக்காய்
ஒப்பம் இட்டு
ஓர் இரவில்
அச்செய்தி

நாட்டு நலன்
முக்கியமாம்
கருப்பெல்லாம்
அழியணுமாம்

திட்டம் மட்டும்
பளித்துவிட்டால்
தீரா நோய்
தீர்ந்திடுமாம்.

ஐநூறு
ஆயிரத்தை
அப்படியே
கொடுத்துவிட்டு,

அவசரத்திற்கு
காசெடுக்க
பொறுமையோடு
நிற்கணுமாம்.

மருத்துவ
மனையினிலும்
எண்ணெய்
நிலையத்திலும்

பேருந்து
பயணத்திலும்
அரசு மது
கடைகளிலும்

அனைத்தும்
செல்லுமென
அறிவிப்பும்
வந்ததுவே

சீர்திருத்தம்
இதுவென்றும்
புதிய இந்தியா
வருமென்றும்

ஆன்லைன்
வாதிகள்
நாடெங்கும்
ஆதரிக்க

சாதுர்ய
சட்டத்தை
சாணக்ய
திட்டத்தை

அவசரமாய்
பிறப்பித்து
அயல்நாடு தான்
எதற்கு?

சாமானியன்
பாதிப்பை
சகவாசி
சங்கடத்தை

கடுகளவும்
சிந்திக்கா
குறை பிரசவம்
இத்திட்டம்

கருப்பை
ஒழிக்க
ஆயிரமே
வேண்டாமென்று

கருத்தாய்
பேசுவோரே
இரண்டாயிரம்
இங்கு எதற்கு?

சட்டத்தை
மதிப்பவர் தான்
எத்தனை பேர்
இங்குண்டு

கருப்பை
வெள்ளையாக்கும்
தொழிலும்
உதித்தது

கமிஷனுக்கு
கைமாற்றும்
காரியமும்
நடக்குதே

"ராணுவம்
தவிக்கிறது
நீயும் கிடந்து
தவியென்றும்

சினிமா சீட்டு
வேண்டி
கூட்டத்தில்
நிற்பவனே

நாட்டின் நலன்
கருதி
நிற்க கால்
வலிக்கிறதா" என

பிதற்றல்
பேசுபவர்
எக்கச்சக்கம்
இங்குண்டு.

ஐயா நாட்டு
நல விரும்பிகளே
மக்கள் நலம்
பாருங்கள்

அடுத்த வேலை
பசியாற
அரிசி
வாங்குபவனும்

அடுத்த போகம்
விளைவிக்க
விதை நெல்
வேண்டுபவனும்

அன்றைய
தினம் கழிக்க
கூலிக்கு
செல்பவனும்

வருமானம்
கணக்கிட்டு
வாடகைக்கு
வாழ்பவனும்

சிறு தொழில்
அது செய்து
சிக்கனமாய்
இருப்பவனும்

பாதிக்கப்
பட்டவரில்
பெரும்பகுதி
அவ்வகையே

கோடியில்
மிதப்பவன்
வரிசைக்கு
வந்ததில்லை

வரிசையில்
நிற்பவன்
கோடியைப்
பார்த்ததில்லை



2 comments:

  1. குழந்தைதை பிறப்பதற்கு முன்னே அந்த குழந்தைக்கு பலப்பல குறைகள் காண்பது உங்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும்

    உங்களைப்போன்ற இருமனநிலை கொண்டவர்களால் எளிதில் மக்களைக் குழப்பத்தில் ஆள்த்திவிட முடிகிறது

    தற்போது உங்களால் முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுயுங்கள் இல்லை மூடிக்கிட்டு வேறு வேலைக்கு செல்லுங்கள்

    நம்முடைய பிரதமர் 50 நாட்கள் கால அவகாசம் கேட்டும் பொறுத்துக்கொள்ள முடியாத உங்களைப்போன்றவர்களால் எப்படி நல்ல விஷயக்களுக்காக போராட முடியும்???

    ReplyDelete
    Replies
    1. நான் யாரையும் கொழப்பவோ விளக்கவோ இதை எழுதவில்லை.. நான் கண் முன் பார்த்தவற்றை பதிவு செய்துள்ளேன். நீங்கள் மக்களுக்கு என்ன உதவிகள் செய்தீர்கள் என பட்டியலிட்டால் இயன்றால் பிடித்தால் நானும் செய்ய முற்படுவேன். ஐம்பது நாட்கள் கழித்து அற்புதம் ஒன்றும் நிகழாதென்பது என் கணக்கு. அது தவறின் அனைவருக்கும் நலமே. தவராவிட்டால் மறக்காது இங்கு வந்து நீங்கள் கொட்டிய வார்த்தைகளை அள்ளிக் கொண்டு செல்லவும்.

      Delete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...