Monday 5 December 2016

விடியல் நோக்கி....

சானம் தெளித்து
கோலம் போட்டு,
தீவனம் வைத்து
பாலைக் கரந்து,
அடுப்பை மூட்டி
சோறு சமைத்து,
அழுக்குத் துணியை
அடித்துத் துவைத்து,
பத்து பாத்திரம்
துலக்கி வைத்து,
வீட்டை அடுக்கி
அழகு படுத்தி,
விளக்கை ஏற்றி
விடியல் நோக்கி..

பொழுதும் விடிந்ததாம்
மாற்றம் நிகழ்ந்ததாம்,
கோலம் முடித்து
தாளம் படித்து,
பாலைக் கரந்து
பாடம் பயின்று,
பண்டம் சமைத்து
பணிக்கு கிளம்பி,
துவைத்து உலர்த்தி
கவிதை இயற்றி,
வீட்டை அடுக்கி
ஓவியம் பழகி,
விளக்கினை ஏற்றி
இருட்டிலேயே இன்றும்.



#women #womenempowerment #freedom #struggleathome #work

2 comments:

  1. அருமையான கவிதை!!! முற்றிலும் உண்மையான வரிகள்....

    காலம் காலமாக பெண்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்று சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டுபராமரிப்பு இன்னும் இதர பல வேலைகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது நம் சமூகம். அதையே இன்றுவரை பெருவாரியான பெண்களும் பின்பற்றுகிறார்கள். இந்த பெருவாரியான பெண்களில் சேராமல் பணிக்கு செல்லும் திருமணமான பெண்களின் நிலையோ இன்னும் கொடுமை.

    வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து, அலுவலகத்திற்கு அலுப்புடன் வரும் பெண்கள் அங்கும் பணியை நிறைவாக செய்துமுடிப்பதற்குள்தான் எத்தனை எத்தனை போராட்டம்.

    ஒரு பெண் எப்படி நல்ல பெயர் வாங்க முடியம்? எப்படி என்னைவிட அதிகமாக சம்பாதிக்க முடியம்? என்று பொறாமையில் பொங்கும் ஆண் நெஞ்சங்களும் இங்குண்டு.

    தன்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்களை மணம்முடிக்க தயங்கும் ஆண்களும், நீ வேளைக்கு போக வேண்டாம்... வீட்டிலேயே இரு என்று கட்டளையிடும் ஆண்களும் மாறும் வரை எதுவும் மாறப்போவது இல்லை.

    அனைத்தையும் மீறி, இல்லை நான் பணிக்கு செல்வேன், வீட்டு வேலை செய்ய மாட்டேன் என்றால் "சம்பாதிக்கும் திமிரு" என்று சுலபமாக முத்திரை குத்திவிடுவார்கள்.

    என்னுடன் பணிபுரியும் சகதோழிகளும் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறர்கள் உண்மையான விடியலை நோக்கி!!!

    ReplyDelete
  2. Mutrilum unmaiyana varigal kalamkalamaga pengal ithaithan seigirargal 1000 BHARATHIYAR vandhalum pengalin nilai marathu.. itharku aanaathikkamum oru karanam..ovvoru aanum manathu vaithal matram undagum... vidiyalai nokki kathirukirom.....

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...