Thursday 1 December 2016

விதி மீறல்

தலைக்கவசம் அது
உயிர்கவசம்
தெரிந்தும் கூட 
அணிவதில்லை
இருக்கை பட்டை
அணிவதெல்லாம்
காவலன் இருந்தால்
செய்வதுண்டு
பச்சை வருமென
முன்கூட்டி
கணிக்கும் திறமை
நமக்குண்டு
மஞ்சள் பார்த்தும்
நிறுத்தாமல்
கடந்து செல்வோம்
அவசரமாய்
நிறுத்தம் இல்லை
எனுமிடத்தில்
நிறுத்திச் செல்வோம்
நிம்மதியாய்
ஒருவழி பாதை
அதுவழியே
இருவழி செல்வது
இயற்கையப்பா
இடம்வலம் எல்லாம்
இஷ்டம்போல்
போவது ஓட்டுநர்
சுதந்திரமே
விரைவாய் வாகனம்
செலுத்துவது
வீரமிகுதியின்
அறிகுறியே
வரிசையில் சென்று
பழக்கமல்ல
முந்திச் செல்வோம்
முனைப்போடு
மெல்லமாய் ஒருவன்
சென்றாலும்
ஒலிஎழுப்பி அவனை
விரட்டுவதும்
குறுக்கே ஒருவன்
வந்தாலும்
வசைமொழி பாடி
மிரட்டுவதும்
பள்ளி இருக்கும்
வீதியிலே
பறந்து செல்லும்
பண்பாடும்
நள்ளிரவு
வேளையிலே
ஈ எறும்பில்லா
சாலையிலே
மின்னல் வேகத்தில்
வாகனங்கள்
செலுத்துவதும் நம்
குணகளன்றோ
நேரம் மிச்சம்
செய்வதற்க்கே
நெரிசல் மிகுந்த
சாலையிலே
கிடைக்கும் சிறு
இடத்தினிலும்
புகுந்து போவது
திறமையன்றோ
சாலை விதிகள்
மீறுவது
மரபணுவில் கலந்த
விஷயமிங்கே
விதியை மீறாது
இருந்தவரின்
உயிர்சேதம் தவிரும்
நிச்சயமாய்



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...